தமிழ் பாடகர் ஆன மலையாள நடிகர்

நடன இயக்குனர் பிருந்தா முதன் முதலாக இயக்கும் படம் ஹோ சினாமிகா. தமிழ் ,மலையாளம் மொழிகளில் வெளியாகிறது. துல்கர் சல்மான் ,காஜல்அகர்வால் அதிதி ராவ் நடித்துள்ளனர்.இது ஒரு முக்கோண காதல் கதை என்கின்றனர்.இது துல்கர் சல்மானின் 33 ஆவது படமாகும். 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். நேரடியாக தமிழ் படங்களில் நடித்துள்ள துல்கர் சல்மான் முதன் முதலாக தமிழில் பாடி பாடகராகவும் ஆகியுள்ளார்.இந்த படத்தில் இடம்பெறும் அச்சமில்லை  அச்சமில்லை என்ற பாடலை பாடியுள்ளார்.அந்த பாடல் படத்தின் பிரஸ்ட் சிங்கிளாக வெளியாகி உள்ளது . இப்படம் அடுத்த மாதம் 25 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.