இலங்கையில் மீண்டும் மலேரியா நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மலேரியா எதிர்ப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
மலேரியா ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை அறியப்பட்டாலும் நாட்டில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் கல்முனைப் பிரதேசங்களில் மலேரியா நோய்க்கிருமியான Anopheles stephensi அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் ஜீவனி ஹரிஷ்சந்திர தெரிவித்துள்ளார்.
இந்த நுளம்புகளை ஒழிப்பதற்காக நாடு முழுவதும் பூச்சியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் கருத்து வெளியிட்டார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            