மே 9ல் பிரதமராகும் மகிந்த..! - ''துரோகத்தால் தான் வீழ்த்தப்பட்டேன்'' - கலங்கினார் கோட்டாபய

“அருகில் இருப்பவர்களை அதிகம் நம்பக்கூடாது. நானும் அவ்வாறு நம்பித் தான் ஏமாந்து விட்டேன் என முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசத்துடனான சந்திப்பின் போது, அவர் தனது வீட்டில் வைத்து உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்போது, “வாருங்கள் சாகர, என்னை மறந்துவிட்டீர்கள் என்றல்லவா நினைத்தேன்” எனக் கூறி சாகரவை வரவேற்றார் கோட்டாபய.

“இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்” சேர் எனக் கோட்டாபயவிடம் கூறிய சாகர, வந்த நோக்கத்தையும் விவரித்தார்.


மே 9ல் பிரதமராகும் மகிந்த..!

மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 9 ஆம் திகதி பிரதமராக பொறுப்பேற்பார் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வெளிநாடு சென்றுள்ள அதிபர் வரும் 8 ஆம் திகதி நாடு திரும்புகிறார்.

அதன் பின்னர் பிரதமர் நியமனமும் அத்துடன் அமைச்சரவை மாற்றமும் இடம்பெறலாமென சொல்லப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த தகவலை ஆளுங்கட்சி பக்கம் உறுதி செய்ய முடியவில்லை.

மகிந்த மீண்டும் பிரதமராவதை பசில் மற்றும் நாமல் விரும்பவில்லை என்றும் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரே அதற்கு ஆதரவை வெளியிட்டுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து மேலும் அறிய முடிந்ததுள்ளது.