வெலிகட சிறைச்சாலைக்கு விரைந்த மகிந்த..!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை (Johnston Fernando) பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று (25) சென்றுள்ளார்.

இலங்கையில் பதிவு செய்யப்படாத  BMW ரக கார் ஒன்றின் விசாரணையில் பின்னணியில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடந்த 23 குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அண்மையில் இலங்கையில் BMW ரக கார் ஒன்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, அந்த காரில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமான ஆவணங்களையும் இரகசிய காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் வழங்க வந்த போது அவர் கைது செய்யப்பட்டதுடன், கோட்டை நீதவான் நீதிமன்றினால் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகளின் பணிப்பாளராக பணியாற்றியவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.