ரணிலை நேரடியாக சென்று பார்வையிட்ட மஹிந்த ராஜபக்ஷ, சஜித் பிரேமதாஸ



 உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ

ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிட சென்றேன். சந்தோசமாக கதைத்தார். அவருடைய உடல் நிலையும் சரியில்லை. அரசியல் பழிவாங்கல்களைத் தவிர அரசாங்கத்தால் வேறு எந்த  நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் ரணில் விக்கிரமசிங்க இதனை கண்டுகொள்ளவில்லை. சின்ன சின்ன விடயங்களுக்காக பிடித்து சிறையில் அடைப்பது மிகவும் கவலையாக உள்ளது என்றார்.
 
இதேவேளை சிங்கப்பூரிலிருந்து நேற்று இரவு நாடு திரும்பிய எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று காலை பார்வையிட்டார்

இதன்போது கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாச

முன்னாள் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பில் மூன்றாம் தரப்பினர் ஒருவர் முன்கூட்டியே கணித்திருக்கின்றமை நாட்டின் ஜனநாயகத்தையும் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்றார்.

இதேநேரம் ரணிலைப் பார்வையிடுவதற்காக ஐக்கிய மக்கள் மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார உள்ளிட்ட பல பிரமுகர்கள் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.