7 ஆண்டுகள் கழித்து தெலுங்கி வெளியாகும் 'மெட்ராஸ்'

மெட்ராஸ் படத்தை பா.ரஞ்சித் இயக்கினார். இப்படத்தில் கார்த்திக், கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடித்த மெட்ராஸ் படம் தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்தது. நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்றது. தற்போது அப்படத்தை 7 வருடங்களுக்கு பிறகு இப்போது தெலுங்கில் டப்பிங் செய்து வெளிவிட உள்ளார்கள். இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் நேற்று வெளியானது. ஜனவரி மாதம் 13 ஆம் திகதி படத்தை வெளியிடப்போவதாக  கூறியுள்ளனர். இப்படத்துக்கு நா பேரு சிவா 2 என பெயர் வைத்துள்ளனர். இதற்கு முன்பு கார்த்திக் நடித்த நான் மகான் அல்ல படத்தை 2010 ஆம் ஆண்டு நா பேரு சிவா என தெலுங்கில் டப்பிங் செய்தனர். அப்போது இப்படத்துக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் அதே பெயரில் '2' யை சேர்த்து இரண்டாம் பாகம் போல்  நா பேரு சிவா 2 என மெட்ராஸ் படத்துக்கு பெயர் வைத்துள்ளனர்.