வடக்கில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அரசியலில் புறக்கணிக்கப்பட்டவர்களே மாவீரர் தின விவகாரத்தை கையில் எடுத்து இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க(Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மாவீரர் தினத்தை கையிலெடுக்கும் அரசியல்வாதிகள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வடக்கில், மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அரசியலில் புறக்கணிக்கப்பட்டுள்ளவர்களே மாவீரர் தின விவகாரத்தை கையில் எடுத்து இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிக்கின்றார்கள்.
நாட்டில் மீண்டும் பிரிவினைவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க வேண்டிய தேவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு கிடையாது. தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்திற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஆதரவளித்துள்ளார்கள்.
இந்த அரசாங்கத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பிரதான பங்காளிகளாக உள்ளனர். அனைத்து இன மக்களின் ஒத்துழைப்புடன் சிறந்த அரச நிர்வாகத்தை முன்னெடுப்போம்.
தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே இனவாதத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்யும் தரப்பினர் வீணாக அச்சமடையத் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            