விக்ரமின் மகான் ரிலீஸ் அப்டேட்

கார்த்திக் சுப்புராஜ் அடுத்து இயக்கி வரும் படம் மகான். சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். வணிபோஜன் ,பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெரிய எதிர்பார்பில் இருக்கும் இந்த படத்தை நேரடியாக ஒடிடியில் வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி வருகின்றது.இந்த மாத இறுதியில் அமோசான் ப்ரைமில் படம் நேரடியாக வரும் என தெரிகிறது.தற்போது டுவிட்டரில் இயக்குனர் கார்த்திக் படத்தின் ரிலீஸ் பற்றி பேசியிருக்கிறார். " எங்கள் படம் மகான் ரெடி ஆகிவிட்டது. விரைவில் ரிலீஸ் ஆகும் என தெரிவித்து உள்ளார்.மேலும் தற்போது சென்சார் முடிந்த படத்துக்கு U /A சான்றிதழ் கிடைத்து இருக்கின்றது. படம் 2 மணி 45 நிமிடம் ரன் டைம் என்கின்ற தகவலும் வந்துருக்கின்றது.