விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடும் பணி தீவிரம்!

கிளிநொச்சி - திருநகர் பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளால் தங்கம் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இன்று (22.10.2023) காலை முதல் இந்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினர், காவல்துறையினர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கிராம அலுவலர் முன்னிலையில் அகழ்வு பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிவான் ஜெ.சுபராஜினி முன்னிலையில் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டிருந்த போதும் எந்தவித பொருட்களும் மீட்கப்படாத நிலையில் அகழ்வு நடவடிக்கை நிறுத்தப்பட்டு இன்றைய தினம் மீளவும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.