2022 இல் ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியல் - முதல் 10 இல் ஒரே ஒரு ஆசிய நாடு - இலங்கையின் நிலை!

2022 இல் உலகில் ஆகக் குறைந்த அளவில் ஊழல் இடம்பெற்ற நாடுகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் [Transparency அமைப்பின் மூலம் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், குறித்த ஊழல் மதிப்பீட்டு அறிக்கையின் படி, உலகிலுள்ள 180 நாடுகள் மதிப்பிடப்பட்டு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் 3 ஆவது இடத்தில் 84 புள்ளிகளுடன் நோர்வே உள்ளதுடன், இரண்டாவது இடத்தில் 87 புள்ளிகளுடன் நியூஸிலாந்து மற்றும் பின்லாந்து ஆகிய இரு நாடுகள் உள்ளது.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனலின் பட்டியலின் படி, 90 புள்ளிகளுடன் டென்மார்க் முதலிடத்தில் உள்ளது.

குறித்த பட்டியலில், முதல் 10 இடங்களில் உள்ள ஒரே ஒரு ஆசிய நாடாக சிங்கப்பூர் உள்ளதுடன், கடந்த ஆண்டுகளை விட சிங்கப்பூர் தரவரிசையில் சற்றுக் கீழ் இறங்கியுள்ளது.

2020 ம் ஆண்டு மூன்றாவது இடத்தில் இருந்த சிங்கப்பூர், 2021 இல் நான்காவது இடத்திற்கு சென்றதுடன், இம்முறை 5 ஆவது இடத்திற்கு வீழ்ச்சி கண்டுள்ளது.

குறித்த பட்டியலில் 36 புள்ளிகளுடன் இலங்கை 101 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.