கனடாவின் உயர்ந்த கோபுரத்தை தாக்கியது மின்னல் - எட்டு இலட்சம் பேர் பரிதவிப்பு


கனடாவில் உள்ள சி.என் கோபுரத்தை மின்னல் தாக்கியுள்ளது.

உலகின் மிக உயரமான கோபுரங்களுள் ஒன்றான, இந்த கோபுரம் ( சுமார் 553.3 மீட்டர் உயரம் ) கனடாவின் ஒன்டாரியோ மகாணத்தில் உள்ள டொரன்டோவில் அமைந்துள்ளது.

புதன்கிழமை அதிகாலையில் இக்கோபுரத்தை தாக்கிய மின்னல், சில வினாடிகளுக்கு வானத்தை ஒளிரூட்டியது.

இந்நிலையில் கனடாவின் ஒன்டாரியோ, கியூபெக் மாகாணங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால், சுமார் 8 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.