நாட்டை பிரிக்கும் விடுதலைப் புலிகள்! த.தே.கூட்டமைப்பை சாடிய சரத் வீரசேகர


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தேசத்துரோக அமைப்பாகும். எனவே, அக்கட்சியின் முடிவுகள் தொடர்பில் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர விமர்சித்துள்ளார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கவுள்ளதே என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சரத் வீரசேகர இவ்வாறு விமர்சித்துள்ளார்.

நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விடயங்கள் எல்லாவற்றையும் எதிர்க்கும் தேசத்துரோக அமைப்பே கூட்டமைப்பு. விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் கிளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.புலிகளுக்கு இந்நாட்டை பிரிக்க வேண்டும்.

பிரபாகரன் முன்னிலையிலேயே கூட்டமைப்பினர் பதவியேற்றனர்.அவர்கள் கூறுவது தொடர்பில் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.” எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.