கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான மண்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 276ஐ எட்டியுள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மண்சரிவு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை மற்றும் நூல்புழா ஆகிய பகுதிகளில் மூன்றாவது நாளாக தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இதுவரை 276 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மாத்திரமின்றி, வெளியான தரவுகளின் அடிப்படையில் காணாமல் போயுள்ள 240 பேரை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முண்டக்கை ஆற்றுக்கு நடுவே இராணுவம் உருவாக்கும் பாலத்தின் கட்டுமானம் மிக விரைவில் முடிவடையும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், தேடுதல் நடவடிக்கையை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வயநாடு பகுதிகளில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு இதுவரை 143 சடலங்களை அனுப்பி வைத்துள்ளனர்.
போத்துகல் பகுதியில் சாலியாரில் இருந்து 134 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.