பாலியல் குற்றவாளியுடன் ட்ரம்ப் புகைப்படம் வெளியானதால் பரபரப்பு - 6,400 பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்! :



பிரித்தானியாவில் பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்குவோருக்கு எதிராக ரசாயன முறை ஆண்மை நீக்கம் (Chemical Castration) மேற்கொள்ளும் திட்டம் விரைவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை பிரித்தானிய் நீதித்துறைச் செயலர் டேவிட் லேம்மி தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பிரித்தானியாவில் சோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த முறையில் நல்ல பலன்கள் கிடைத்துள்ளதாகவும், இதை அடுத்த கட்டமாக வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் கீழ், சுமார் 6,400 பாலியல் குற்றவாளிகள் மீது ரசாயன முறை ஆண்மை நீக்கம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, பிரித்தானியா முழுவதும் உள்ள பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த நடவடிக்கை சட்டரீதியாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் டேவிட் லேம்மி குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, அவர் பாலியல் குற்றவாளிகளுடன் இருக்கும் புகைப்படம் திரையிடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது, அவருக்கு வேண்டுமென்றே செய்யப்பட்ட அவமானமாக கருதப்படுகிறது.
 
ட்ரம்ப், பாலியல் கடத்தல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறப்பட்டது.
இதற்கிடையில், இங்கிலாந்து சென்ற நாளில், அவர் அந்த பாலியல் குற்றவாளிகளுடன் இருக்கும் புகைப்படம் பொது இடத்தில் திட்டமிட்டு திரையிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், ட்ரம்பின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
 
ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் பல அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த புகைப்படம் வெளியானது ட்ரம்புக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இந்த செயல், ட்ரம்ப் இங்கிலாந்துக்கு வந்தபோது அவருக்கு எதிராக ஒரு திட்டமிட்ட அவமானத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்பட்டதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.