இந்தியாவுக்கு எதிராக பல்வேறு குற்றச் செயல்களை செய்துள்ள காலிஸ்தான் ஆதரவாளர் லக்பீர் சிங் லாண்டா பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் தற்போது கனடாவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காலிஸ்தான் ஆதரவாளரான லக்பீர் சிங் லாண்டா(33) இந்தியாவிற்கு எதிராக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.
2021ம் ஆண்டு மொகாலியில் உள்ள பஞ்சாப் காவல்துறை உளவுத்துறை அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டவர் குறித்த நபர் என்றும் கூறப்படுகிறது.
அத்துடன், 2022 ஆண்டு டிசம்பர் மாதம் டார்ன் டரனில் சர்ஹாலி காவல்நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்த செப்டம்பர் மாதம் கனடாவை சேர்ந்த லக்பீர் சிங் லாண்டாவிற்கு நெருக்கமானவர்களின் 48 இடங்களில் பஞ்சாப் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனைகளின் போது, பலர் கைது செய்யப்பட்டதோடு அத்துடன் லக்பீர் சிங் வியாபாரி ஒருவரிடம் ஹரிகே என்ற பெயரில் சுமார் ரூபாய் 15 லட்சம் வரை அச்சுறுத்தி வாங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு குற்றச் செயல்களை மேற்கொண்டுள்ள லக்பீர் சிங் லாண்டா-வை பயங்கரவாதியாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.