லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சந்துஷ் சேனாபதி தெரிவித்துள்ளார்.இந்திய உதவியின் கீழ் பெற வேண்டிய மருந்துகள் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளமை காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனையில் தற்போது 20 அத்தியாவசிய மற்றும் உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அறுவை சிகிச்சைகள் மற்றும் சில சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படும் மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களின் நன்கொடைகளுக்குக் கூட தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக எதிர்வரும் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்திற்குள் வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு மேலும் மோசமடையலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சிறுநீரக நோய், சர்க்கரை நோய், நரம்பியல் நோய்கள் என பல நோய்களுக்கு மருந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சந்துஷ் சேனாபதி தெரிவித்துள்ளார்.இதனால், லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை எதிர்காலத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மருந்துப் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.