மனித புதைகுழிகளை மறைக்கும் தொல்லியல் திணைக்களம் - வெளிக்கிளம்பியுள்ள சர்ச்சை

"கொக்குத் தொடுவாய் போன்ற வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள எண்ணிலடங்காத மனிதப்புதைக்குழிகளை மூடி மறைப்பதற்காகத்தான் அங்குள்ள பெருமளவான நிலங்களை தொல்லியல் திணைக்களம் தம்வசப்படுத்தி இருக்கின்றதா?" 

என்று மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் பகுதியில் கடந்த மாதம் 29ஆம் திகதி நிலத்தை தோண்டியபோது மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அங்கு அகழ்வு பணிகள் நாளை(07) ஆரம்பிக்கப்பட உள்ளன.

இவ்வாறான நிலையிலேயே, இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், கொக்குத் தொடுவாய் பகுதியில் முறையான கண்காணிப்புடன் கூடிய அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன் பக்கச் சார்பற்றதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதும் அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.