சேறு பூசுவதை விட என்னை கொன்று விடுங்கள் : ரோஹித அபேகுணவர்தன ஆவேசம்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன((Rohitha Abeygunawardena)) தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதை விட தன்னைக் கொலை செய்வதே மேல் என தெரிவித்துள்ளார்.

அரசியல் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், சேறு பூசும் பிரசாரங்கள் மூலம் தன்னை வீழ்த்துவது எளிதல்ல என தெரிவித்துள்ளார்.

"சேறுபூசி என் நற்பெயரைக் கெடுக்காமல், பல தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது போல் என் வாழ்க்கையையும் அழித்துவிடுங்கள் என்று என்னை வெறுப்பவர்களிடம் கூற விரும்புகிறேன்".

தேசத்திற்காகவும் அரசியலுக்காகவும் எனது உயிரை தியாகம் செய்ய தயார் எனவும் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

“இது சேறு பூசுவதை விட சிறந்தது. என் குணத்தை அழிப்பதை விட என்னைக் கொல்வது மேல்” என்று அவர் வலியுறுத்தினார்.

அண்மையில் இவரின் மருமகனின் கண்டியில் (Kandy) உள்ள வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இரண்டு சொகுசு வாகனங்களை காவல்துறையினர் கைப்பற்றியிருந்தனர். அதற்கு பிறகே அவர் இவ்வாறான கருத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.