நள்ளிரவில் முல்லைத்தீவு காட்டுக்குள் நடந்த கடத்தல் முயற்சி : இரகசியமாக சென்ற பொலிஸார்


 
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குளத்திற்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் மரத் தடிகளை கடத்த மேற்கொண்ட முயற்சி புதுக்குடியிருப்பு பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

உடையார்கட்டு காட்டுப்பகுதியில் நேற்று இரவு மரதத் தடிகள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர் ஹேரத்திற்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வெட்டப்பட்டு ஏற்றுவதற்கு தயாராக காணப்பட்ட, 1700 ற்கு மேற்பட்ட காயா மரத்தடிகளை மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களின் வருகையையடுத்து அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இந்நிலையில் மரக் குற்றிகளை பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸார்; ஏற்றிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.