கே.ஜி.எப் 2 புதிய போஸ்டர் வெளியீடு

கன்னடத்தில் பிரசாந்த் இயக்கத்தில் யஷ் நடித்த மிகப் பெரிய படம் கேஜிஎப். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் யஷ்யை   வைத்து இயக்கி முடித்திருக்கிறார் பிரசாந்த் நீல். இப்படம் வருகின்ற ஏப்ரல் 14 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் யஷ்சுடன்,ஸ்ரீநிதி செட்டி ,ரவினா டாண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இன்று நடிகர் யஷ்யின் 36 ஆவது பிறந்த நாள் என்பதால் கேஜிஎப் 2 படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.