கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் கூறுகையில் லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாசிட்டிவ் என ரிசால்ட் வந்துள்ளது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் கொரோனா பாதிப்பு என்னை தொற்றிக் கொண்டது. தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.தடுப்பூசி போடாதவர்கள் போட்டுக் கொள்ளுங்கள். நான் என்னை தனிமை படுத்தி சிகிச்சை பெறவுள்ளேன். விரைவில் குணமாகி மீண்டும் வருவேன் என தெரிவித்துள்ளார்.