கீர்த்தி சுரேஷின் குட்லக் சகி ரிலீஸ் திகதி அறிவிப்பு

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட்லக் சகி.நாகேஷ் குக்குனுர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ,மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வழங்கும் இந்த திரைப்படத்தை வொர்த் ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் கதிர் சந்திர பதிரி தயாரித்துள்ளார். விளையாட்டு ,காதல் ,நகைசுவை பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதி பினி ஷெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்துள்ளார்.இதில் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்துள்ளார். டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்ப்பக்கப்பட்ட இப்படம் திகதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படம் வரும் ஜனவரி 28 ஆம் திகதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளது.