அல்லு அர்ஜுன் பாராட்டிய கார்த்திக்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு புஷ்பா படத்தின் முதல் பாகம் வெளியானது.சுகுமார் இயக்கிய இப்படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்க பஹத் பாசில் வில்லனாக நடித்துள்ளார். சமந்தா ஒரு பாடலுக்கு அடிஇருந்தார். இந்த நிலையில் இந்த படத்தையும் அல்லு அர்ஜுனின் நடிப்பையும் பாராட்டியுள்ளார் நடிகர் கார்த்திக். இவர் கூறியது  புஷ்பாவாக உங்களுடைய நடிப்பை பார்த்து அசந்து போனேன். நம்மை சிறைப்பிடிக்கும் அப்படி ஒரு நடிப்பு. சுகுமார் சார் இந்த கதையில் மனிதர்களையும் அவர்களின் நிகழ்வுகளையும் உயரதரத்தில் நீங்கள் படமாக்கிய விதம் அருமை என குறிப்பிட்டுள்ளார். பதிலுக்கு அல்லு அர்ஜுன் கூறியது என்னுடைய நடிப்பு மற்றுமின்றி ஒவ்வொருவரின் உழைப்பால் உருவான புஷ்பாவுக்கு ஒட்டுமொத்தமாக நன்றி என கூறியுள்ளார்.