மூன்று மில்லியன் பார்வையாளர்களை கடந்த கார்த்தியின் ஜப்பான் பட ட்ரைலர்


ஜப்பான் படத்தின் ட்ரைலர் மூன்று மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் 'ஜப்பான்' திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் நேற்று முன்தினம் வெளியான நிலையில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.