அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : ஐஸ்கிறீம், விமானப்பயணத்திற்கு கோடிக்கணக்கில் செலவழித்த கமலா ஹாரிஸ்

நடைபெற்று முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தனது பிரசார நடவடிக்கைகளுக்காக ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ்(kamala harris) ஆடம்பரமாக ரூபா.101 கோடியை செலவழித்துள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதன்படி ஐஸ்கிறீம், நட்சத்திர ஹோட்டல்களில் தங்குதல் மற்றும் விமான பயணங்களுக்காக என இந்த செலவு மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

வீணாக செலவு செய்த கமலா ஹாரிஸ்

இதுகுறித்து அமெரிக்க அரசியல் நோக்கர்கள் கூறியதாவது: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்(donald trump) சார்பில் சுமார் ரூ.3,000 கோடி செலவிடப்பட்டது. ஆனால் ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் சார்பில் ரூ.6,640 கோடிக்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டது.

பல்வேறு தொழிலதிபர்கள், பிபரலங்கள் ஆளும் ஜனநாயக கட்சிக்கு தாராளமாக நன்கொடைகளை வழங்கினர். இதை கமலாவும் அவரது ஆதரவாளர்களும் வீணாக செலவு செய்தனர். ஆடம்பரம், அளவுக்கு அதிகமான செலவு ஆகியவை கமலாவின் தோல்விக்கு முக்கிய காரணம் ஆகும்.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தால் ஜனநாயக கட்சிக்கு ரூ.168 கோடி அளவுக்கு கடன் ஏற்பட்டிருக்கிறது. இந்த கடனை அடைக்க நன்கொடையாளர்களிடம் கையேந்தும் நிலைக்கு கட்சி தள்ளப்பட்டு உள்ளது. தேர்தல் பிரசார கடனை அடைக்க குறைந்தது 2 ஆண்டுகள் வரை ஆகலாம்.

பிரசாரத்துக்காக எந்தெந்த வகையில், எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்பது குறித்து நன்கொடையாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் இதற்கு கமலா தரப்பில் தெளிவான பதில் அளிக்க முடியவில்லை.

பிரபலங்களின் ஆதரவை பெற பல கோடிகள் வாரி இறைக்கப்பட்டு இருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு இதுதொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன என அவர்கள் தெரிவித்துள்ளனர்.