அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் - வெளியாகிய புதிய சர்ச்சை..!

''ஜோ பைடன் 86 வயது வரையெல்லாம் உயிருடன் இருக்கமாட்டார்", என அமெரிக்க அரசியல் பெண் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவருக்கு வாக்களித்தால், அவருக்கு பதிலாக கமலா ஹாரிஸ் அதிபராகும் நிலைதான் ஏற்படும் என்று கூறியுள்ளார்.

தற்போது அமெரிக்காவின் அதிபராக இருக்கும் ஜோ பைடன் (80), தான் 2024ஆம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், Republican கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் Nikki Haley என்னும் பெண், ஜோ பைடனுக்கு வாக்களித்தால், அவருக்கு பதிலாக கமலா ஹாரிஸ் அதிபராகும் நிலைதான் ஏற்படும் என்று கூறியுள்ளார்.

அதாவது, "இப்போதே ஜோ பைடனுக்கு 80 வயது ஆகிறது. 2024 அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அவரது பதவிக்காலம் முடியும்போது அவருக்கு 86 வயதாகிவிடும்.

அதுவரையிலெல்லாம் ஜோ பைடன் உயிருடன் இருக்கமாட்டார். ஆக, அவர் அதிபராக இருக்கும்போதே மரணமடைந்துவிட்டால், துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் அவருக்கு பதிலாக பதவி ஏற்க வேண்டியிருக்கும்." என தெரிவித்தார்.