விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமலகாசன்

நடிகர் விஜய் சேதுபதிக்கு இன்று பிறந்தநாள். இதனால் இவருக்கு திரையுலகினர்,ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமலகாசன்,"சந்தையின் பின்னே போகாமல் தனக்கென ஒரு தேடலை கொண்டவர் தம்பி விஜய் சேதுபதி. கதையின் கதாநாயகனாக தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர். அவரது தேடலும் துணிச்சலும் வீ ண்போகாது . தம்பி விஜய்க்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என வாழ்த்து தெரிவித்துள்ளனர்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர்.