காஜல் அகர்வால் கர்ப்பம்

தென்னிந்திய  திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். நான் மகான் அல்ல படத்தில் ரசிகர்களை கவர்ந்த இவர் அதற்கு பிறகு மாற்றான் , துப்பாக்கி , மாரி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தார். கடந்த 2020 அக்டோபர் மாதம் கவுதம் சிச்சலுவை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்தார். இவர் கைவசம் பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, ஹோய் சினாமிக்கா, கமலுடன் இந்தியன் 2, தெலுங்கில் ஆச்சார்யா, பாலிவூட்டில் உமா என்கின்ற படத்திலும் நடித்து வருகிறார். சமீபகாலத்தில் அவர் ஒப்பந்தமாகியிருந்த படங்களில் இருந்து விலகி வந்தார். இந்நிலையில் காஜல் அகர்வால் தற்போது கர்ப்பம் அடைந்துள்ள தகவலை அவருடைய கணவர்  கவுதம் சிச்சலுவை  சமூகவலைத் தளத்தியில் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர்.