தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் நகர்சேர் கடுகதி தொடருந்து சேவையொன்று எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கபடும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மடு தேவாலய வருடாந்த உற்சவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.