இரண்டாம் எலிசபெத் மாகாராணியின் இறுதி சடங்கு நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் லண்டன் வந்தடைந்தார்.லண்டனுக்கு வரும் சுமார் 500 அரச தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ஒருவராவார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவுஸ்ரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் மற்றும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ஆகியோரும் லண்டன் வந்துள்ளனர்.இதேவேளை பங்களாதேஷ் பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட கொமன்வெல்த் தலைவர்களும் இறுதி சடங்கிற்காக பிரித்தானியாவிற்கு வந்துள்ளனர்.
மேலும் பிரான்ஸ் ஜனாதிபதி அயர்லாந்து பிரதமர், ஜேர்மன், இத்தாலி, இந்தியாவின் ஜனாதிபதிகள் மற்றும் ஐரோப்பாவில் உள்ள அரச குடும்ப உறுப்பினர்களும் இறுதி சடங்கில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.பல தலைவர்களுக்கு, இந்த சந்திப்பு சில இராஜதந்திரங்களில் ஈடுபடுவதற்கான ஒரே வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            