யாழில் வைத்தியர் அர்ச்சுனா பகீர் வாக்குமூலம்: அம்பலமாகும் முறைகேடுகள்


யாழ். சாவகச்சேரி வைத்தியாலை (Chavakachcheri Base Hospital) நடவடிக்கைகள் தொடர்பில் தோன்றியுள்ள பெரும் குழப்ப நிலைக்கு மத்தியில் புதிய பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனா பகீர் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.

சாவகச்சேரி (Chavakachcheri) வைத்தியசாலை நடவடிக்கைகளில் இருந்து விலகியிருக்கும் 85 வீதமான வைத்தியர்கள் யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனின் நடவடிக்கைகளுக்கு பயந்து ஒழிந்துக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வைத்தியசாலையில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் வைத்தியர்களின் முறைக்கேடுகள் தொடர்பில் தம்மிடம் போதுமான ஆதாரம் இருப்பதாகவும் அவற்றை மனிதஉரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.