பல கோடிக்கு விலைபோன ஷாருக்கானின் ஜவான் பட OTT வியாபாரம்- இத்தனை கோடிகளா

இயக்குனர் அவதாரம் எடுத்து சில படங்கள் தான் கொடுத்துள்ளார் அட்லீ, அதற்குள் பாலிவுட்டில் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்து அதனை வெற்றிகரமாகவும் செய்து முடித்துள்ளார்.

ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் வெற்றிகரமாக வெளியாகி நல்ல வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது.

படத்தில் ஷாருக்கை தாண்டி நயன்தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி என பலர் நடித்துள்ளார்கள்.

படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாருக்கான் நீண்ட நாள் கழித்து இப்படியொரு மாஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது அருமையாக இருப்பதாகவும், படமும் விறுவிறுப்பாக இருப்பதாகவும் விமர்சனங்கள் கொடுத்து வருகிறார்கள்.

ரிலீஸ் ஆன நாள் முதல் நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தின் OTT வியாபாரம் முடிந்துள்ளதாம். நெட்ஃபிக்ஸ் படத்தை ரூ. 250 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.