மாகாண சபைத் தேர்தலை முன் கூட்டியே நடத்துமாறு ஜெய்சங்கர் கோரிக்கை


13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தமிழ் தேசிய கட்சிகளுடனான சந்திப்பில் கூறியுள்ளார்.

இந்நிலையில் மாகாண சபைத் தேர்தலை முன் கூட்டியே நடத்துமாறும் கோரியுள்ளார்.

அதேநேரம், ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கட்சிகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் தொடர்பிலும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு தெளிவு படுத்தியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தமிழுக்கு கூறியுள்ளார்.