நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை அள்ளி குவித்த ஜெய் பீம்

டி.ஜே. ஞானவேல் இயக்கியத்தில் சூர்யா ,விஜிமோல் ஜோஸ்,மணிகண்டன்,ரஜிஷா விஜயன் போன்ற பலரும் நடித்து அனைவரின் மத்தியில் பெரிதும் வெற்றி பெற்ற திரைப்படம் ஜெயம்பீம், 90 களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது.நேரடியாக ஓடிடி யில் வெளியான இந்த திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.இப்படம் சில தினங்களுக்கு முன்பு ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் இடம்பெற்றது.இந்நிலையில் இந்த திரைப்படதிற்க்கு  9 ஆவது நொய்டா சர்வதேச திரைப்பட விழா 2022 இல் மூன்று விருதுகளை அள்ளி குவித்தது.சிறந்த படத்துக்கான விருதும் , சிறந்த நடிகைக்கான விருதும் ,சிறந்த நடிகர்க்கான விருத்தியும் பெற்றுள்ளது.