யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி கடற்கரையில் இரும்பில் அமைக்கப்பட்ட பொருளொன்று கரையொதுங்கியள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பொருள்  இன்று(01) திங்கட்கிழமை  காலை கரையொதுங்கியுள்ளது.
இந்த பொருளை  பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.
குறித்த பொருள் வேறு பகுதிகளில் இருந்து கடலலையில் அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அண்மையில் கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் கப்பல் போன்ற அலங்கரிக்கப்பட்ட உருவத்துடன் இரதம் ஒன்று கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            