யாழில் வீடுடைத்து லட்சக்கணக்கில் திருட்டு

கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உடும்பிராய் மூன்று கோவில் பகுதியில்  வீடு ஒன்றை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை கோப்பாய் காவல்துறையினர் நேற்றைய தினம்(08) கைது செய்துள்ளதோடு திருடப்பட்ட ஏழு லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களையும் மீட்டுள்ளனர்

இந்நிலையில், சந்தேகநபர்களால் திருடப்பட்ட விலையுயர்ந்த தொலைக்காட்சி, மின்மோட்டர், மடிக்கணினி மற்றும் பெறுமதியான தொலைபேசி, தோடு, பெறுமதியான மணி கூடு என்பன மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் சுன்னாகம் உடும்பிராய் பகுதியைச் சேர்ந்தவர்கள் மூவர் எனவும் மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.