இத்தாலிய பிரதமருக்கு கொரோனா தொற்று-ஆபிரிக்க நாடுகளுக்கான பயணம் இரத்து!

இத்தாலிய பிரதமர் மரியோ ட்ராகி, கொவிட் தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்த பின்னர் எண்ணெய் வளம் மிக்க அங்கோலா மற்றும் கொங்கோ குடியரசிற்கான பயணத்தை இரத்து செய்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.ரஷ்யாவில் இருந்து எரிசக்தி விநியோகத்தை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைக்காக எதிர்வரும் புதன்கிழமை லுவாண்டாவிற்கும், வியாழக்கிழமை பிரஸ்ஸாவில்லிக்கும் 74 வயதான டிராகி, செல்லவிருந்தார்.இந்தநிலையில், அங்கோலா மற்றும் கொங்கோ குடியரசிற்கான திட்டமிடப்பட்ட பயணங்களில், சுற்றுச்சூழல் மாற்ற அமைச்சர் ராபர்டோ சிங்கோலானி மற்றும் வெளியுறவு அமைச்சர் லூய்கி டி மாயோ ஆகியோரால் இத்தாலி பிரதிநிதித்துவப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வாரம், இத்தாலியும் அல்ஜீரியாவும் எரிசக்தி உறவுகளை வலுப்படுத்தவும், இத்தாலிக்கு வட ஆபிரிக்க அரசின் எரிசக்தி ஏற்றுமதியை அதிகரிக்கவும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.ஏப்ரல் 11ஆம் திகதி அல்ஜீரியாவில் ஒப்பந்தங்களை பிரதமர் மரியோ ட்ராகி அறிவித்தார், ரஷ்ய எரிவாயு மீதான அதன் சார்புநிலையைக் குறைக்கும் இத்தாலியின் உந்துதலில் இது ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என்று கூறினார்.வெளிநாட்டு எரிவாயுவை பெரிதும் நம்பியிருக்கும் இத்தாலி, கடந்த ஆண்டு ரஷ்யாவிடமிருந்து சுமார் 29 பில்லியன் கன மீட்டர்களை (பிசிஎம்) வாங்கியது, இது அதன் மொத்த எரிவாயு இறக்குமதியில் 40 சதவீதம் ஆகும்.