சுமந்திரனை சிறீதரனே இரண்டு மூன்று இடங்களில் காப்பாற்றியுள்ளார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறீதரன் தொடர்பில் எம்மிடம் பாரிய விமர்சனங்கள் உள்ளன.சுமந்திரனை காப்பாற்றியது அவர்தான்.
எப்பொழுதோ அம்பலப்படுத்தப்பட்டு அரசியலில் இருந்து ஒதுக்கப்படவேண்டிய சுமந்திரனை சிறீதரனே காப்பாற்றினார்.
2020 இலும் சிறீதரன்தான் சுமந்திரனுக்கு வாக்கு கேட்டார்.எனவே எந்தளவிற்கு நாம் மன்னிப்பு கொடுக்கலாம் என கேள்வி எழுப்பினார்.