கட்டுநாயக்கவிற்குள் புகுந்த விடுதலைப்புலிகளுக்கு இது கடினமான விடயம் இல்லை - தமிழ் எம்.பி சுட்டிக்காட்டு


தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் வடகிழக்கில் இருந்த விகாரைகள் பாதுகாக்கபட்டதே தவிர அவை சேதப்படுத்த படவில்லை என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

வட கிழக்கு மாகாணங்களில் உள்ள விகாரைகளில் கை வைத்தால் அப்படிச் செய்யும் தமிழர்களின் தலைகளுடன் களனிக்கு வரவேண்டியேற்படுமென மேர்வின் சில்வா தெரிவித்தமை தொடர்பில் கருத்துரைக்கும் போதே கஜேந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, மேர்வின் சில்வா என்கிற நாடாளுமன்ற உறுப்பினர் தமிழர்களுக்கு எதிராக பயங்கரமான இன வெறியை கொலை வெறியை காட்டியிருக்கிறார்.

விகாரைகள் தாக்கப்படுவதென்றும், மகாநாயக்கர்கள் தாக்கப்படுகின்றனர் என்றும் அப்பட்டமான பொய்யை கூறியிருக்கிறார்.

தமிழீழ விடுதலை புலிகளின் காலத்தில் விகாரைகள் பாதுகாக்கபட்டவையே தவிர அவை எந்த ஒரு இடத்திலேயும் அவை சேதப்படுத்த படவில்லை.

கொழும்பிலே கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் புகுந்து தகர்த்தெறிந்த விடுதலை புலிகளுக்கு வட கிழக்கில் உள்ள விகாரைகளை அழிப்பது கடினமான காரியம் அல்ல.