தனக்கு பிடியாணை பிறப்பித்த சர்வதேச நீதிமன்றம் கடும் எதிர்வினைகளைச் சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல் (Israel) பிரதமர் நெதன்யாகு (Benjamin Netanyahu) வெளிப்படையாகவே எச்சரித்துள்ளார்.
காசா போரில் போர்க் குற்றம் மற்றும் மனிதக் குலத்திற்கே எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நேற்றையதினம் (21.11.2024) பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கடந்தாண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையயில் காசாவில் உள்ள ஹமாஸ் படையைக் குறிவைத்து தீவிர தாக்குதல்கள் நடத்தியது.
பிடியாணை
இதனால் காசாவில் உள்ள அப்பாவி பொதுமக்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன், உயிர் சேதங்களும் அதிகமாக இடம்பெற்றது.
இதற்கிடையே காசா மோதலில் போர் குற்றங்கள் நடந்துள்ளதாகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் நெதன்யாகுவுக்கு பிடியாணை பிறப்பித்து சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சர்வதேச நீதிமன்றம்
இதற்கிடையே இது தொடர்பாக நெதன்யாகு சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது
"இப்போது சர்வதேச நீதிமன்றம் நடத்திய விசாரணையும் ஒரு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நீதிபதியின் தலைமையில் நடந்து இருக்கிறது.
என் மீதும், இஸ்ரேல் நாட்டின் மீதும் வேண்டுமென்றே பொய்யாகக் குற்றம் சாட்டுகிறது. அப்பாவி மக்கள் உயிரிழக்கக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாகவே இருந்துள்ளோம்.
காசாவில் ஹமாஸ் பதுங்கி இருந்த இடங்களைக் குறிவைத்து மட்டுமே இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. அப்போதும் அங்கு அப்பாவி மக்கள் இருந்தால் அவர்களை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
இஸ்ரேல் - காசா
அதேநேரம் ஹமாஸ் அமைப்பினர் தான் அப்பாவி மக்களைச் சுட்டுக் கொல்கிறார்கள். மனித கேடயங்களாகப் அவர்களை பயன்படுத்துகிறார்கள்.
காசா மக்களுக்கு தேவையான உதவிகளை நாங்கள் தான் செய்கிறோம். 700,000 டன் உணவுகளை காசா மக்களுக்கு இஸ்ரேல் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், ஹமாஸ் அமைப்பினர் அந்த உணவு பொருட்களை கொள்ளையடிக்கிறார்கள். அப்படியிருக்கும் போது இஸ்ரேல் தான் காசா மக்களை பட்டினி போடுவதாக சொல்வதை ஏற்க முடியாது.
அங்குள்ள மக்கள் மோசமான நோய்களால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.
கடுமையான விளைவு
கடந்த சில வாரங்களில் மட்டும் காசாவில் உள்ள 97 சதவீத மக்களுக்கு போலியோவுக்கு தடுப்பூசி போட்டுள்ளோம். அப்படியிருக்கும் போது எப்படி எங்கள் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு வருகிறது என்று புரியவே இல்லை.
ஹமாஸுக்கு எதிரான இந்த போரைக் கூட நாங்கள் ஆரம்பிக்கவில்லை. கடந்தாண்டு அக். 7ம் தேதி அவர்கள் தான் முதலில் தாக்கினார்கள்.
நாங்கள் பதிலடி மட்டுமே கொடுத்தோம். ஈரான், சிரியா மற்றும் ஏமனில் நடந்த உண்மையான போர்க் குற்றங்கள் தொடர்பாகச் சர்வதேச நீதிமன்றம் அமைதி காப்பது ஏன்? நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
சர்வதேச நீதிமன்றமும் சரி, அதன் முடிவை ஆதரிப்பவர்கள் "கடுமையான விளைவுகளை" எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் எதிரிகள் தான் எங்கள் எதிரிகள். எனவே, எங்கள் வெற்றி என்பது உலகிற்கே கிடைத்த வெற்றியாகவே இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.