சத்தமின்றி வேகவேகமாக ரபாவினுள் நுழைந்த இஸ்ரேலிய படை - பேரழிவு குறித்து எச்சரிக்கை



காசா மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்திய இஸ்ரேல் இராணுவம் ,ஹமாஸ் அமைப்பின் இறுதி கோட்டை என வர்ணிக்கும் ரபா மீதும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தாக்குதல்களை தொடங்கியுள்ளது.

இதில் எகிப்திலிருந்து ரபா செல்லும் முக்கிய வீதியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது இஸ்ரேல் படை.

எனினும் ரபாவின் உள்பகுதிக்குள் செல்வதற்கு கண்டனம் வெளியிட்ட அமெரிக்கா, அவ்வாறு படையெடுப்பை மேற்கொண்டால் பாரிய உயிர்ச்சேதம் ஏற்படும் என இஸ்ரேலை எச்சரித்தது.

ஆனால் சத்தமின்றி ரபாவின் உள்பகுதிக்குள் இஸ்ரேல் இராணுவம் ஊடுவியுள்ளதாக பாலஸ்தீனிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இது தொடர்பில் இஸ்ரேல் இராணுவம் உத்தியோகபூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே ரபாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகளின் வாகனங்களை நேற்று தங்கள் வீரர்கள் தாக்கியதாக ஹமாஸ் அறிவித்தது. காயமுற்ற இராணுவ வீரர்களை மீட்க அல்-சலாம் பகுதியில் மீட்பு ஹெலிகொப்டர்கள் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இதனிடையே அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் காசா மக்கள் தொகையை பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதற்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது.

இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் முழு அளவில் படையெடுப்பு ஒன்றை ஆரம்பிப்பதற்கு ரபா நகர எல்லையில் இஸ்ரேலிய இராணுவம் போதுமான துருப்புகளை குவித்து வைத்திருப்பதாக அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் இருவர் தகவல் பகிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.