போரில் அதிர்ச்சி திருப்பம்..! இஸ்ரேலுக்கு எதிராக திரும்பியது அமெரிக்கா

ஹமாஸ் அமைப்பை கண்டிப்பாக இஸ்ரேல் அழிக்க வேண்டும் ஆனால் காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்க நினைப்பது மிகப்பெரிய தவறு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும் பலஸ்தீனத்தில் ஹமாஸ் ஆக்கிரமிப்பு கண்டிக்கத்தக்கது எனவும் பலஸ்தீனத்திற்கு சுதந்திரம் மிக அவசியம் வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு முன்னர் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயற்பட்டுவந்த பைடன் தற்போது சுதந்திர பலஸ்தீனத்திற்காக குரல் கொடுத்திருக்கின்ற விடயம் உலக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காசாவில் போர் தீவிரமடைந்தால் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் கணிசமான இழப்புகள் ஏற்படும் என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.