துல்லியமாக தாக்கிய இஸ்ரேல்: தகர்க்கப்பட்ட ஹமாஸ் தலைவரின் வீடு

ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஒருவருரின் வீடு முற்றாக தகர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த 7 ஆம் திகதி காசாவை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் தீடீர் தாக்குதல் நடத்தினர், அதன் பின் இஸ்ரேல் போர் பிரகடனம் அறிவித்து இன்று வரை போர் கடுமையாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தபட்டமை தொடர்பில் பெரும் பங்கு இருக்கலாம் என நம்பப்படும் ஹமாஸின் மூத்த தலைவரான அரசியல் பிரிவு துணை தலைவர் சலே அல்-அரூரியின் வீடு தகர்க்கப்பட்டிருக்கிறது.

பல ஆண்டுகளாக தேடலில் இருப்பவருக்கு அமெரிக்கா 2018-ல் அவரைக் குறித்து தகவல் தந்தால் 5 மில்லியன் டாலர் சன்மானமாக வழங்குவதாக அறிவித்திருந்தது.

மேலும், அவர் தனது வீட்டில் இல்லை லெபனானில் பதுங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

அதேவேளை, ஐ.நா.வின் தரவுகளின் படி இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தரைவழி தாக்குதல்களினால் மேற்குக் கரையில் இதுவரை 1600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 120-க்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்தோடு, “போர் நிறுத்தத்திற்கான அழைப்பு என்பது இஸ்ரேலை ஹமாஸிடமும் பயங்கரவாதத்திடமும் சரணடைய செய்வதற்கான அழைப்பு. அது நடக்காது. போரில் வெல்லும் வரை போராடுவோம்” என இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.