உக்கிரமடையும் காசா போர்! யுத்த நிறுத்தத்திற்கு தயாராகும் இஸ்ரேல்

ஹமாஸ் இயக்கத்தின் பிடியிலுள்ள ஏனைய பணய கைதிகளையும் விடுவிக்கும் வகையில் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

புதிய யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கட்டார் தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெட்டன்யாஹு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துவது தொடர்பான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ஹமாஸ்சிற்கு எதிரான போரானது அழுத்தம் மற்றும் செலவுகள் நிறைந்தது என்ற போதிலும் வெற்றிக்காக போராட வேண்டும் எனவும் பெஞ்ஜமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காசா இராணுவமயமாக்கப்பட்டு இஸ்ரேல் பாதுகாப்பு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் எனவும் இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.

பணய கைதிகளாக சிறைபிடிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களில் மூவரை இஸ்ரேலியப் படைகள் தவறுதலாக சுட்டுக் கொலை செய்து ஒருநாள் கடந்த நிலையில், அவரது கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

ஹமாஸ் இயக்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் பிரதமரை இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனமான மொசாட்டின் தலைவர் சந்தித்ததை அடுத்து பெஞ்ஜமின் நெதன்யாகு இதனைக் கூறியுள்ளார்.