தெற்கு காசாவிடமிருந்து போர்வீரர்களை திரும்பப் பெற்ற இஸ்ரேல்


தெற்கு காசாவிடமிருந்து (South Gaza) அதிகமான போர் வீரர்களை திரும்பப் பெற்றுள்ளதாக இஸ்ரேல் (Israel) தெரிவித்துள்ளது. 

கடந்த ஆறு மாதமாக இடம்பெற்று வரும் மோதலினை தொடர்ந்து போர்நிறுத்தம் குறித்த புதிய பேச்சுவார்த்தைகளுக்காக இஸ்ரேல் மற்றும் ஹமாஸினுடனான (Hamas) குழுக்கள் நேற்றைய தினம் எகிப்துக்கு (Egypt) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் இஸ்ரேலானது, ஆரம்பத்திலிருந்தே காசாவில் உள்ள போராளிகளின் எண்ணிக்கையை குறைத்து வருவதில் ஈடுபட்டு வருகின்றது.

குறிப்பாக, கடந்த வாரம் ஏழு உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்ட பின்னர், அதன் நட்பு நாடான வொஷிங்டனின் மனிதாபிமான நிலைமையை மேம்படுத்துவதற்கான அழுத்தம் அதிகரித்து வருகிறது.-

இந்த நிலையில், இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர், படையினரைத் திரும்பப் பெறுவதற்கான காரணங்கள் அல்லது சம்பந்தப்பட்ட எண்ணிக்கை பற்றிய விபரங்களைத் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இரண்டும் தாங்கள் தூதுக்குழுக்களை எகிப்துக்கு அனுப்புவதை உறுதிப்படுத்தின.

ஆனால், இஸ்ரேல் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு வளைந்து கொடுக்காது மற்றும் தீவிர கோரிக்கைகளுக்கு அடிபணியாது என்று எச்சரித்துள்ளார். 

இதனை தொடர்ந்து, ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான பாசம் நைம், (Basem Naim) “ நெதன்யாகு (Netanyahu) இன்னும் தோல்வியிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தயங்குகிறார்.

மேலும், விரிவான போர்நிறுத்தத்திற்கு செல்ல அவரை நிர்ப்பந்திக்க அமெரிக்காவின் அழுத்தம் போதுமானதாக இல்லை என்று தெரிகிறது“ என தெரிவித்துள்ளார்.