காசாவின் எகிப்துடனான மூலோபாயம் மிக்க இடைவழி நிலப்பகுதி ஒன்றை கைப்பற்றியதாக அறிவித்திருக்கும் இஸ்ரேல் நேற்று (30) தூர தெற்கு நகரான ரபா மீது கடுமையான பீரங்கி தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடுகளை நடத்தியதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச எதிர்ப்புக்கு மத்தியிலும் காசாவில் பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபா மீது இஸ்ரேல் இராணுவம் இந்த மாத ஆரம்பத்தில் படையெடுப்பை தொடங்கியது.
கடந்த ஒரு சில நாட்களாக எகிப்து எல்லையை ஒட்டிய அந்த நகர் மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருப்பதோடு அங்கு அடைக்கலம் பெற்றிருக்கும் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் எகிப்து–காசா எல்லையை ஒட்டிய 14 கிலோமீற்றர் நீளமான பிலடெல்பி இடைவழி நிலத்தை கைப்பற்றியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
குறுகலான எல்லை பகுதியின் ‘செயல்பாட்டு கட்டுப்பாட்டை’ இஸ்ரேல் கைப்பற்றியதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி குறிப்பிட்டுள்ளார்.
இங்கு சுமார் 20 சுரங்கப்பாதைகளையும் கண்டுபிடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
‘பிலடெல்பி இடைவழி நிலப்பகுதி ஹமாஸ{க்கான ஒட்சிசனாக செயற்படுகிறது. இது காசாவுக்கான ஆயுதங்களை கடத்தும் இடமாகவும் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது’ என்று ஹகாரி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இங்கு கடத்தல் சுரங்கப்பாதைகள் இயங்குவதை எகிப்து மறுத்துள்ளது. ‘பலஸ்தீன நகரமான ரபா மீதான நடவடிக்கையைத் தொடர்வதையும், அரசியல் நோக்கங்களுக்காக போரை நீடிப்பதையும் நியாயப்படுத்த இஸ்ரேல் இந்தக் குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்துகிறது’ என்று எகிப்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் அந்நாட்டு அரசுடன் தொடர்புபட்ட அல் கஹேர் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
இந்த பிலடெல்பி இடைவெழி நிலத்தை இஸ்ரேல் கைப்பற்றுவது இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கு இடையே 1979 இல் செய்துகொள்ளப்பட்ட அமைதி உடன்படிக்கையை மீறுவதாக இருக்கக் கூடும் என்றும் எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இஸ்ரேலின் இந்த அறிவிப்பு குறித்து எகிப்து இதுவரை உத்தியோகபூர்வ பதில் எதனையும் வெளியிடவில்லை.
பீஜிங் சென்றிருக்கும் எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசி, முற்றுகை காசாவுக்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க வலியுறுத்தியதோடு, பலஸ்தீனர்கள் தமது சொந்த மண்ணில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் எந்த ஒரு முயற்சியையும் எதிர்ப்பதாக, எகிப்தின் நீண்ட கால கொள்கையை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார்.
காசாவில் தெற்கு முனையில் உள்ள எகிப்துடனான எல்லை, இஸ்ரேலின் நேரடி கட்டுப்பாடு இல்லாத காசாவின் ஒரே நில எல்லையாகவே இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.