போர்நிறுத்தத்துக்கு மத்தியில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் : 50 பேர் பலி



காசாவில், இஸ்ரேல் இராணுவத்தினர் நடாத்திய தாக்குதலில் 50 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தம் நடைமுறையி உள்ள நிலையில், நேற்றைய தினம் மேற்கு கடற்கரை பகுதியில் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
 
பலஸ்தீனத்தின் ஜெனின், துல்கரேம் மற்றும் தமுன் பகுதியில் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சண்டை மற்றும் ஆளில்லா விமான தாக்குதலில் 50பலஸ்தீனியர்கள் கொல்லப்படதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

 
இந்நிலையில், பலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் ஜெனின் அகதிகள் உள்ள முகாம் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 20 கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன.

மேலும் பலஸ்தீனர்கள் 100 பேரை இஸ்ரேல் இராணுவத்தினர் சிறை பிடித்து வைத்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து 40க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.