மனிதர்களில் ஆண், பெண் இனங்கள் உருவாக காரணமாக உள்ள க்ரோமோசோம்களில் வைய்(Y) வகை க்ரோமோசோம்கள் குறைந்து வருவதாக ஆய்வொன்றில் வெளியாகிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை பிறப்பில் அந்த குழந்தை ஆணா பெண்ணா என நிர்ணயிப்பதில் குரோமோசோம்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள் பெண் பாலினத்தையும், ஒரு எக்ஸ் மற்றும் ஒரு வைய் குரோமோசோம்கள் ஆண் பாலினத்தையும் அடையாளப்படுத்துகின்றன.
ஆனால் தற்போது மனிதர்களிடையே வைய் குரோமோசோம்கள் குறைந்து வருவதாக வெளியாகியுள்ள ஆய்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கெண்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் வைய் குரோமோசோம்கள் மனிதர்களிடையே குறைந்து வருவதாக தெரிய வந்துள்ள நிலையில், இது மக்கள் தொகையில் ஆண் பாலினம் குறைவதற்கான சாத்தியங்களை ஏற்படுத்துவதாக அஞ்சப்படுகிறது.
இதனால் எதிர்காலத்தில் மனிதர்களில் ஆண் பாலினமே இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் இதுகுறித்து ஆய்வறிஞர் பேராசிரியர் ஜென்னி க்ரேவ்ஸ் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 166 மில்லியன் ஆண்டுகளில் வைய் குரோமோசோம்கள் சீராக தனது மரபணுப்பொருளை இழந்து வருவதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் வைய் குரோமோசோம்களின் சிதைவின் காரணமாக, அடுத்த 11 மில்லியன் ஆண்டுகளில் வைய் குரோமோசோம்கள் முற்றிலும் மறைந்துவிடும் சாத்தியங்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதேசமயம் இந்த மாற்றம் புதிய வகை பாலினங்களை உருவாக்கும் சாத்தியங்களையும் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.