முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் கைது செய்யப்படுவார் என பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளர் சுதத்த திலகசிறி தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது சமூக ஊடக கணக்கில் காணொளி ஒன்றை வெளியிட்டதன் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வொயிஷ்
நாட்டில் சட்டம் ஒழுங்கு அனைவருக்கும் சமமான அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது மீண்டும் நிரூபிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை நாளைய தினம் அதிகாரிகள் கைது செய்யத் தவறினால் தமது யூடியூப் தளத்தை மூடிவிடுவதாக சுதத்த திலகசிறி தெரிவித்துள்ளார்.
சுதத்த திலகசிறி தேசிய மக்கள் சக்தியின் தீவிர ஆதரவாளர் என்பதுடன் அந்த கட்சிக்கான ஆதரவினை வெளியிட்டு காணொளிகள் வெளியிட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.