பேலியகொட மீன் சந்தையைச் சுற்றி பதற்றத்தை ஏற்படுத்திய, பாதாள உலகக் கும்பல் தலைவர் பழனி ரெமோஷனின் நிதி ஒப்பந்தத்தின் பேரில், ஞானரத்ன மாவத்தையில் ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது, நபர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதாள உலகக் கொலையாளிகள் இருவர் 'பிரபு' என்ற நபரைச் சுட்டுக் கொன்றதோடு, மற்றொருவரை பலத்த காயப்படுத்தி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று காலை நடந்த இந்த தாக்குதலின் இலக்கு, பாதாள உலகத் தலைவர் புகுடுகண்ணாவின் கும்பலின் நெருங்கிய சகா என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
புகுடுகண்ணாவின் பிரிவினருக்கும் பழனி ரிமோஷனின் பாதாள உலகக் கும்பலுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் பகை இந்த தாக்குதலுக்கு வழிவகுத்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதற்கு தேவையான வாடகை துப்பாக்கி ஏந்திய நபர்களை நியமித்து தாக்குதலை வழிநடத்தியது கஞ்சிபாணி இம்ரானின் குழுவாக இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தாக்குதலில் கொல்லப்பட்ட பிரபு, 2022 ஆம் ஆண்டு வெல்லே சாரங்காவின் மைத்துனரின் கொலைக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
இதன்பின்னர் பாதாள உலகக் கும்பல்களின் இலக்காக மாறிய 40 வயது பிரபு, பேலியகொட மீன் சந்தையில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்துள்ளார்.
நேற்று காலை மீன் சந்தைக்கு எதிரே உள்ள ஒரு கடையில் உணவு வாங்க வந்தபோது, துப்பாக்கிதாரிகளால் அவர் தாக்கப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரர்கள், பிரபுவை T-56 துப்பாக்கியால் சுட்டதில், அவர் படுகாயமடைந்தார்.
துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் மீன் சந்தை வளாகத்திற்கு முன்னால் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பேலியகொடையைச் சேர்ந்த ஒருவரும் காயமடைந்தார்.
தாக்குதல் நடந்த நேரத்தில் பேலியகொட பகுதியில் மின்சாரம் தடைப்பட்டதால், சிசிரீவி கருவிகள் இயங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனவே தாக்குதலின் எந்த காட்சிகளையும் பெற முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், நேற்று மதியம் பிரபு உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்த உடனேயே, பேலியகொட குற்றப்பிரிவுபணிப்பாளர், தலை
தாக்குதல் நடந்த இடத்திலிருந்து பல வெற்று T-56 தோட்டா உறைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு அங்கு விழுந்த பல T-56 தோட்டா உறைகளை தாக்குதல்தாரி எடுத்துச் சென்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதன்பின்னணி குறித்து பொலிஸார் மற்றும் குற்றப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.